சேலத்தில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தகவல்
சேலத்தில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
சேலம்:
சேலத்தில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
தடுப்பூசி போடும் பணி
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப் படுத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மாநகராட்சி பகுதியில் உள்ள 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 மினி கிளினிக்குள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி போடப்படுகிறது.
இலக்கு நிர்ணயம்
மாநகராட்சி பகுதியில் 45 வயதிற்கு மேற்பட்ட 3 லட்சம் பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மண்டல அளவில் தினமும் 2 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கோரிமேடு அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கப்பட்டு உள்ள கொரோனா சித்தா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.
தடுப்பூசி முகாம்
அதே போன்று சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு, ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின் போது, மாநகர நல அலுவலர் டாக்டர். பார்த்தீபன், டாக்டர் சண்முகபிரியா, உதவி ஆணையாளர்கள் சண்முகவடிவேல், சரவணன், ரமேஷ்பாபு, ராம்மோகன், மாவட்ட சித்த மருத்துவர் செல்வ மூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story