கோபி அருகே பால மாரியம்மன் கோவில் திருவிழா


கோபி அருகே பால மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 13 April 2021 4:10 AM IST (Updated: 13 April 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே உள்ள பால மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

கடத்தூர்
கோபி அருகே உள்ள சின்ன மொடச்சூரில் பால மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் திருவிழா கடந்த 5-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 6-ந் தேதி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 7-ந் தேதி கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு பெண்கள் தினமும் புனிதநீர் ஊற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நாளை (புதன்கிழமை) மாலை 5 மணி அளவில் மாகாளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணி அளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 6 மணி அளவில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அலகு குத்தி வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மதியம் 12 மணி அளவில் அம்மனுக்கு பெரும் பூஜை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 16-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 19-ந் தேதி நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.

Next Story