மாடியிலிருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி சாவு


மாடியிலிருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 13 April 2021 7:12 AM IST (Updated: 13 April 2021 7:12 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி பலியானார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனஞ்சேரி கிராமம் தெலுங்கு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவி ரேகா உட்பட 8 பேருடன் திருவள்ளூரை அடுத்த இருளஞ்சேரி கிராமத்தில் வைக்கோல் போர் ஏற்றுவதற்காக சென்றார்கள்.

அப்போது இரவு வெகு நேரம் ஆனதால் அவர்கள் அங்குள்ள கோவில் அருகே உள்ள கட்டிடத்தின் மாடியில் படுத்து தூங்கினர். இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் வெங்கடேசன் மாடியிலிருந்து இறங்கி கீழே வந்தபோது, அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக ஓடிச்சென்று அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story