ரம்ஜான் நோன்பு தொடங்க இருப்பதன் எதிரொலி: பள்ளிப்பட்டு மசூதிகளில் கிருமிநாசினி தெளிப்பு
ரம்ஜான் நோன்பு தொடங்க இருப்பதன் எதிரொலியாக பள்ளிப்பட்டு மசூதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் உள்ள பேரித்தெருவில் ஜூம்மா மசூதியும், ஆஞ்சநேயர் நகரில் பாத்திமா மசூதியும் உள்ளது. பள்ளிப்பட்டு நகரில் ஏறத்தாழ 2 ஆயிரம் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு முஸ்லிம்கள் கடைபிடிக்கும் ரம்ஜான் நோன்பு நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கயிருக்கின்றன. இதுகுறித்து பள்ளிப்பட்டு ஜூம்மா மசூதி சார்பில் நிர்வாகிகள் பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமியை சந்தித்து ரம்ஜான் நோன்புகள் தொடங்க இருப்பதால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மசூதிகளில் கிருமிநாசினி தெளிக்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து பள்ளிப்பட்டு செயல் அலுவலர் (பொறுப்பு) முனுசாமி உத்தரவின்பேரில், பேரூராட்சி ஊழியர்கள் இரு மசூதிகளிலும் நேற்று கிருமி நாசினி தெளித்து, மசூதி வளாகத்தில் பிளீச்சிங் பவுடரை தெளித்தனர்.
Related Tags :
Next Story