வாகனங்களை அடித்து நொறுக்கிய 5 பேர் கைது


வாகனங்களை அடித்து நொறுக்கிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 April 2021 4:35 PM IST (Updated: 13 April 2021 4:35 PM IST)
t-max-icont-min-icon

வாகனங்களை அடித்து நொறுக்கிய 5 பேர் கைது.

பெரம்பூர், 

சென்னை தண்டையார்பேட்டை சாஸ்திரி நகரில் நேற்று முன்தினம் இரவு சாலையில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை மர்மநபர்கள் அடித்து நொறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அருண்குமார்(வயது 20), அவருடைய நண்பர்களான பிரவீன் (21), கணேசன் (22), அப்பு (21), கார்த்திக் (20) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரித்தனர்.

அதில், அருண்குமாரின் தந்தையான வெங்கடேசன் (45) என்பவரை 2 மாதத்திற்கு முன்பு தண்டையார்பேட்டையை சேர்ந்த ஹரி(22) மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த வழக்கில் கைதான ஹரி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

தந்தையை கத்தியால் குத்திய ஹரியை கொலை செய்வதற்காக நண்பர்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் தண்டையார்பேட்டை சாஸ்திரி நகருக்கு அருண்குமார் சென்றார். இதையறிந்த ஹரி தப்பி ஓடிவிட்டதால் ஆத்திரத்தில் அங்கிருந்த வானங்களை அடித்து நொறுக்கியது தெரிந்தது. கைதான 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story