கோவில்பட்டியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் நகரசபை ஆணையாளர் ராஜாராம் எச்சரிக்கை
கோவில்பட்டியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என நகரசபை ஆணையாளர் ராஜாராம் எச்சரித்துள்ளார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் வீட்டை வெளியே வருபவர்கள் முககவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என நகரசபை ஆணையாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முககவசம் கட்டாயம்
கொரோனா தொற்று பரவல் 2-வது அலை காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இனி பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். கடைகளிலும், பொது இடங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
தடுப்பூசி இலவசம்
திருவிழாக்கள், திருமணம் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சல், தலைவலி, வயிற்று போக்கு, தொண்டை வலி தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக நகரசபைக்கு தகவல் தெரிவித்து விட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.
45 வயதிற்கு மேற்பட்டோர், ஊரணித்தெரு எனமற்றும் ஸ்ரீராம் நகரில் உள்ள நகர்நல மையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டு பயனடைய வேண்டும்.
ரூ.200 அபராதம்
இதனிடையே அரசுத்துறை அலுவலர்கள் மேற்கொள்ளும் ஆய்வில், பொதுஇடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கு ரூ.500ம், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ.5000 வரை பொது சுகாதார சட்டவிதிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 சட்டப்பிரிவு ஐபிசி 188-ன் படி அபராதம் விதிக்கப்படும். மேலும், காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆகவே, கொரோனா 2-ம் அலை பரவலை தடுக்க கோவில்பட்டி நகரசபை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்று இருப்பவர்கள் காலம்தாழ்த்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story