திருவாரூரில் இருந்து திண்டுக்கல், விருதுநகருக்கு பொதுவினியோக திட்டத்துக்கு 2 ஆயிரம் டன் அரிசி


திருவாரூரில் இருந்து திண்டுக்கல், விருதுநகருக்கு பொதுவினியோக திட்டத்துக்கு 2 ஆயிரம் டன் அரிசி
x
தினத்தந்தி 13 April 2021 12:18 PM GMT (Updated: 13 April 2021 12:18 PM GMT)

திருவாரூரில் இருந்து திண்டுக்கல், விருதுநகருக்கு பொதுவினியோக திட்டத்துக்கு 2 ஆயிரம் டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

2 ஆயிரம் டன் அரிசி

இதன்படி நேற்று திருவாரூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். இதில் 1000 டன் அரிசி திண்டுக்கல் மாவட்டத்துக்கும், 1000 டன் அரிசி விருதுநகர் மாவட்டத்துக்கும் என 2 ஆயிரம் டன் அரிசி பொதுவினியோக திட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story