வேலூரில் 3 அனாதை உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர்
வேலூரில் 3 அனாதை உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர்
வேலூர்
வேலூர் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு, விபத்து உள்ளிட்டவற்றால் உயிரிழந்த ஒரு ஆண், 2 பெண் என்று 3 முதியவர்களின் உடல்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த உடல்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் உரிமை கோராததால் அவற்றை அடக்கம் செய்ய அனுமதிக்கும்படி வேலூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரிடம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூகசேவகர் மணிமாறன் கோரிக்கை வைத்தார். அதன்பேரில் 3 அனாதை உடல்களையும் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வேலூர் பாலாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் 3 உடல்களையும் அடக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 உடல்களையும் முறைப்படி அடக்கம் செய்து மலர்தூவி சமூகசேவகர் மணிமாறன் அஞ்சலி செலுத்தினார்.
Related Tags :
Next Story