தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 13 April 2021 7:23 PM IST (Updated: 13 April 2021 7:23 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி:
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் சக்திநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சங்கரபாண்டியன் (வயது 22). இவர் ஒரு கொலை வழக்கில் கோவில்பட்டி மேற்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளம் தெருவை சேர்ந்த கோபால் மகன் பேச்சிமுத்து (35) என்பவரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சங்கரபாண்டியன், பேச்சிமுத்து ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை சிறையில் வழங்கினர்.

Next Story