நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 April 2021 7:24 PM IST (Updated: 13 April 2021 7:24 PM IST)
t-max-icont-min-icon

நாகை புதிய பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம், 

நாகை புதிய பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சம்பந்தன் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா முன்னிலை வகித்தார். இதில் செல்வராசு எம்.பி. கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலையை கண்டித்தும், குற்றவாளிகளை வன்கொடுமை மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரபோஜி, ஏ.ஐ.டி.யூ.சி. மீனவர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story