ஊழியர்களுக்கு கொரானோ தொற்று கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தடை


ஊழியர்களுக்கு கொரானோ தொற்று கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தடை
x
தினத்தந்தி 13 April 2021 7:31 PM IST (Updated: 13 April 2021 7:31 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, செண்பகவல்லி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில் திருவிழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே கோவில் தலைமை எழுத்தர் உள்பட ஊழியர்கள், காவலர்கள், சமையலர் உள்பட 39 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 
ஊழியர்களுக்கு கொரோனா
பரிசோதனையில் நேற்று முன்தினம் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
கோவில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதால் தினமும் காலை, மாலை, இரவு நேரங்களில் கோவில் உள்பக்கம், மற்றும் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி  தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவகலை பிரியா செய்துள்ளார்.
பக்தர்களுக்கு தடை
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Next Story