இறந்து கிடந்த சிறுத்தைப்பூனை


இறந்து கிடந்த சிறுத்தைப்பூனை
x
தினத்தந்தி 13 April 2021 8:07 PM IST (Updated: 13 April 2021 8:09 PM IST)
t-max-icont-min-icon

இறந்து கிடந்த சிறுத்தைப்பூனை.

கோத்தகிரி,

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து ஹோப் பார்க் செல்லும் சாலையில் நேற்று காலை சிறுத்தைப்பூனை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் வீரமணி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். 

பின்னர் இறந்து கிடந்த சிறுத்தைப்பூனையை மீட்டு லாங்வுட்சோலை பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு, சிறுத்தைப்பூனையின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அதே பகுதியில் புதைத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்து கிடந்தது லெப்பர்டு கேட் என்ற 1 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தைப்பூனை ஆகும். அது எவ்வாறு இறந்தது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story