புதிய நிர்வாகிகள் தேர்வு


புதிய நிர்வாகிகள் தேர்வு
x
தினத்தந்தி 13 April 2021 9:30 PM IST (Updated: 13 April 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட தேர்தல் சிவகங்கையில் நடைபெற்றது. மாவட்ட தேர்தலை தேர்தல் ஆணையாளரும், மதுரை மாவட்ட செயலாளருமான ஒச்சுக்காளை, துணை ஆணையாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான பேச்சியம்மாள் நடத்தி வைத்தனர்.
இதில் மாவட்ட தலைவராக தாமஸ் அமலநாதன், மாவட்ட செயலாளராக முத்துப்பாண்டியன், மாவட்ட பொருளாளராக கலைச்செல்வி, மாநில செயற்குழு உறுப்பினராக புரட்சித்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக ஞான அற்புதராஜ், ஆரோக்கியராஜ், குமரேசன், மாவட்ட துணைத்தலைவர்களாக மாலா, ரவி, ஸ்டீபன், மாவட்ட துணைச்செயலாளர்களாக ஜீவா ஆனந்தி, ஜான் அந்தோணிராஜ், அமலசேவியர், சிவகங்கை கல்வி மாவட்ட தலைவராக ரமேஷ்குமார், செயலாளராக ஜெயக்குமார், திருப்பத்தூர் கல்வி மாவட்ட தலைவராக பாலகிருஷ்ணன், செயலாளராக சிங்கராயர், தேவகோட்டை கல்வி மாவட்ட தலைவராக ஜோசப், செயலாளராக சகாயதைனேஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின் நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகளை மாநில துணைத்தலைவர் ஜோசப்ரோஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்கள்.



Next Story