திருக்கோவிலூர் அருகே நாட்டுத்துப்பாக்கியால் சுட்டபோது குண்டு பாய்ந்து விவசாயி காயம் தொழிலாளி கைது பறவைக்கு வைத்த குறி தவறியதால் விபரீதம்
திருக்கோவிலூர் அருகே நாட்டுத்துப்பாக்கியால் சுட்டபோது குண்டு பாய்ந்து விவசாயி காயம் தொழிலாளி கைது பறவைக்கு வைத்த குறி தவறியதால் விபரீதம்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(வயது 33). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று கோலப்பாநைராமத்துக்கு வேலைக்கு சென்றார். ஆனால் அங்கு வேலை இல்லாததால் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியில் நெடுமுடையான் கிராமத்தில் வந்தபோது பிளாஸ்டிக் குழாயில் வடிவமைக்கப்பட்ட நாட்டுத்துப்பாக்கியால் அலெக்சாண்டர் பறவைகளை வேட்டையாடினார். அப்போது குறி தவறி துப்பாக்கியில் இருந்து வெளியான கண்ணாடி குண்டு ஒன்று அதே பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ராமலிங்கம்(55) என்பவரின் மார்பில் பட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் அலெக்சாண்டரை கைது செய்து நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறவை வேட்டையாடியபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி காயம் அடைந்த சம்பவம் நெடுமுடையான் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story