விஷூ பண்டிகை கொண்டாட்டம் பூக்கள் பழங்கள் விற்பனை அமோகம்


விஷூ பண்டிகை கொண்டாட்டம் பூக்கள் பழங்கள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 13 April 2021 9:57 PM IST (Updated: 13 April 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

விஷூ பண்டிகையையொட்டி பொள்ளாச்சியில் பூக்கள், பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

பொள்ளாச்சி

விஷூ பண்டிகையையொட்டி பொள்ளாச்சியில் பூக்கள், பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

விஷூ பண்டிகை

தமிழ் புத்தாண்டு புதன்கிழமை சித்திரை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. கேரளாவில் சித்திரை முதல் விஷூ பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். 

இந்த சித்திரை, விஷூ பண்டிகையையொட்டி பொள்ளாச்சியில்  பழங்கள், பூக்கள் விற்பனை சூடுபிடித்தது. பழக்கடைகள், மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பழங்களை வாங்கி சென்றனர். 

விலை அதிகமாக இருந்தும் விற்பனை அதிகரித்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொள்ளாச்சியில் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.170 வரையும், ஆரஞ்சு ரூ.40 முதல் ரூ.130 வரையும், சாத்துக்குடி ரூ.50 முதல் ரூ.80, பச்சை திராட்சை ரூ.100, கருப்பு திராட்சை ரூ.130, பன்னீர்திராட்சை ரூ.100, வெள்ளரி ரூ.30, மாதுளை ரூ.180 முதல் 210, பலாப்பழம் ரூ.50, முலாம்பழம் ரூ.30க்கு விற்பனை ஆனது.

பூக்கள் விற்பனை

பொள்ளாச்சி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரித்து இருந்தது. அதன்படி மல்லிகை ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரையும், சம்பங்கி ரூ.250 முதல் ரூ.300, செவ்வந்தி ரூ.200 முதல் ரூ.250, அரளி ரூ.300 முதல் ரூ.320, செண்டுமல்லி ரூ.40 முதல் ரூ.50, சில்லி ரோஜா ரூ.250-க்கும் விற்பனை ஆனது.

பூக்களை தரம் வாரியாக பிரித்து, அதற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. 

விற்பனை குறைவு

இந்த பண்டிகையையொட்டி பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகம்பேர் வருவார்கள். ஆனால்  குறைந்த அளவே பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

 கிராமங்களில், சாலையோரங்களில் சந்தைகள் செயல்படுவதால் மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகள் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் காய்கறி விற்பனை குறைவாக இருந்ததுடன், குறைந்த விலைக்கே காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன என்றனர். 

இந்த சந்தையில், தக்காளி 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.30 முதல் ரூ.60-க்கும், கத்திரிக்காய் 20 கிலோ கொண்ட ஒரு பை ரூ.400 முதல் ரூ.450-க்கும், பீர்க்கன்காய் ஒரு கிலோ ரூ.10-க்கும், பாகற்காய் ரூ.20 முதல் 25-க்கும், புடலைங்காய் ரூ.10-க்கும், அரசாணிக்காய் ரூ.10-க்கும், பூசணிக்காய் ரூ.8 முதல் ரூ.15-க்கும், மிளகாய் ரூ.30-க்கும் விற்பனை ஆனது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story