நிலப்பிரச்சினையில் தம்பதியை தாக்கிய அண்ணன் தம்பி கைது


நிலப்பிரச்சினையில் தம்பதியை தாக்கிய அண்ணன் தம்பி கைது
x
தினத்தந்தி 13 April 2021 10:12 PM IST (Updated: 13 April 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

நிலப்பிரச்சினையில் தம்பதியை தாக்கிய அண்ணன் தம்பி கைது

சின்னசேலம்

சின்னசேலம் அருகே தெங்கியானத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 75), விவசாயி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சீனிவாசன் மகன்கள் முத்துசாமி(48), ரவி(42) ஆகியோருக்கும் இடையே நில பிரச்சனையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொன்னுசாமி, இவரது மனைவி முத்துலட்சுமி(70) ஆகியோரை முத்துசாமியும், அவரது தம்பி ரவியும் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்குப்பதிவு செய்து முத்துசாமி, ரவி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


Next Story