குடிபோதையில் திராவகம் குடித்தவர் சாவு


குடிபோதையில் திராவகம் குடித்தவர் சாவு
x
தினத்தந்தி 13 April 2021 10:24 PM IST (Updated: 13 April 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் குடிபோதையில் திராவகம் குடித்தவர் இறந்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் பகுதியை சேர்ந்தவர் காசி ரகுநாதன் (வயது55). இவர் ராமநாதபுரம் அரண்மனையில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். குடிபோதையில் திராவகத்தை குடித்த இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் ராஜநாகேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story