9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை


9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
x
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
தினத்தந்தி 13 April 2021 10:41 PM IST (Updated: 13 April 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

துடியலூர்

கோவையை அடுத்த இடையர் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36). சமையல் தொழிலாளி. இவரது வீட்டில் மனைவியின் தங்கையான 9 வயது சிறுமியும் இருந்தார். 

இந்த நிலையில் சக்திவேல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

மேலும் சிறுமியை நிவாணமாக்கி தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்திருந்தார். இதனை சக்திவேலின் மனைவி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இந்த நிலையில் சிறுமி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறி உள்ளார். அவர் இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை  கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story