பார்வையற்ற மூதாட்டி வீட்டில் திருட்டு
பார்வையற்ற மூதாட்டி வீட்டில் திருட்டு
இடிகரை
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த காளிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாயகி (வயது70). கண் பார்வையற்றவர். இவருடைய கணவர் ஆறுமுகம் 6 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
2 நாட்களுக்கு முன்பு ரங்கநாயகி நாயக்கனூரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றார். அவர், நேற்று காலை வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு திறந்து கிடப்பது தெரிய வந்தது.
இதனால் அவர் கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு துணிமணிகளும் கலைந்து கிடந்தன. பீரோவில் இருந்த ரூ.4 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ரங்கநாயகி கூறுகையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 4 பவுன் நகை திருட்டு போனது.
அதன்பிறகு 2 செல்போன்கள் திருட்டு போயின. இப்போது பணம் திருடப்பட்டு உள்ளது. எனவே போலீஸ் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறி அழுதார்.
Related Tags :
Next Story