ஆழியாறு தடுப்பணை அருகே திடீர் பள்ளம்


ஆழியாறு தடுப்பணை அருகே திடீர் பள்ளம்
x
தினத்தந்தி 13 April 2021 11:00 PM IST (Updated: 13 April 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு தடுப்பணை அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டது.

பொள்ளாச்சி

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை அமைந்து உள்ளது. இந்த அணைக்கு எதிரே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. 

தடுப்பணையின் மேல் பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. 

சுமார் 5 அடி ஆழத்துக்கு பள்ளம் இருந்தது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தடுப்பணையில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகளும் பள்ளத்தை பார்த்து சென்றனர். 

இது குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்று பார்த்ததுடன் உடனடியாக அதை சரிசெய்ய உத்தரவிட்டனர். இது குறித்து அங்கு வந்து செல்பவர்கள் கூறியதாவது:-

இந்த தடுப்பணை அருகே உள்ள விநாயகர் கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இங்கு எப்படி பள்ளம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. 

பள்ளம் ஏற்பட்டு ஒருவாரம் ஆகியும் அதை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலை நீடித்தால் கோவில் சுவர் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. 

எனவே இனியும் அதிகாரிகள் தாமதிக்காமல், உடனடியாக இந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story