பெண் போலீசிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு


பெண் போலீசிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 13 April 2021 11:57 PM IST (Updated: 13 April 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி அருகே பெண் போலீசிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொன்னமராவதி, ஏப்.14-
பொன்னமராவதி அருகே பெண் போலீசிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண் போலீஸ்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள குழிபிறை பகுதியை சேர்ந்தவர் சாருமதி (வயது 32). இவர் காரையூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இவர் ஆலவயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்றுவிட்டு, மீண்டும் குழிபிறைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். செம்பூதி என்ற இடத்தில் வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாருமதியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
தங்க சங்கிலி பறிப்பு
இதில், நிலைதடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் கீழே விழுந்தார். இதனையடுத்து அந்த ஆசாமிகள் கீழே விழுந்து கிடந்த சாருமதியின் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல்வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து சாருமதி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர். ஆசாமிகள் சங்கிலியை பிடித்து இழுத்ததில் சாருமதியின்  கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Next Story