பள்ளிபாளையம் அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளிபாளையம் அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 April 2021 12:39 AM IST (Updated: 14 April 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லுர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கவின் (வயது 30). எலக்ட்ரீசியன். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். கவின் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணி பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வந்து கவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவின் ஏன்? தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story