நாமகிரிப்பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி


நாமகிரிப்பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 14 April 2021 12:40 AM IST (Updated: 14 April 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.
வாலிபர்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொப்பப்பட்டி பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது54). இவரது மகன் ரகுபதி (30). இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 10-ந் தேதி ரேஷன் பொருட்கள் வாங்கி வருவதற்காக சென்ற ரகுபதி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே ஆர்.புதுப்பட்டி நிங்கலான் கரடு பகுதியில் ரகுபதி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அனாதையாக நின்றது. அருகில் உள்ள கிணற்றில் பார்த்தபோது ரகுபதி பிணமாக மிதப்பது தெரியவந்தது.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்ததும் ராசிபுரம் தீயணைப்புத்துறையினர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனநிலை சரியில்லாத ரகுபதி கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story