கொரோனா பரவல் அதிகரிப்பு: நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டில் சில்லறை காய்கறி கடைகள் மூடல்
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிெராலியாக நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் சில்லறை காய்கறி கடைகள் மூடப்பட்டது.
நெல்லை:
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிெராலியாக நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் சில்லறை காய்கறி கடைகள் மூடப்பட்டது.
காய்கறி கடைகள் மூடல்
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மொத்த காய்கறி மார்க்கெட்டில் உள்ள சில்லறை வியாபார கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது.
நெல்லையிலும் சில்லறை விற்பனை காய்கறி கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதன்படி நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் 30 மொத்த விற்பனை கடைகளும், 60 சில்லறை கடைகளும் செயல்பட்டு வருகிறது. இந்த 60 சில்லறை விற்பனை கடைகளும் மூடப்பட்டது.
தற்காலிகமாக....
இந்த நிலையில் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கருதி நயினார்குளம் மார்க்கெட்டில் பின்புறம் காலியாக உள்ள இடத்தில் தற்காலிகமாக சில்லறை காய்கறி விற்பனை கடைகளை அமைக்க வியாபாரிகள் முடிவு செய்து அந்த இடங்களில் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகராட்சி அனுமதி பெற்று சமூக இடைவெளியை பின்பற்றி கடைகளை திறக்க வியாபாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story