4 பேரை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்தவர்கள் கைது


4 பேரை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்தவர்கள் கைது
x
தினத்தந்தி 14 April 2021 1:03 AM IST (Updated: 14 April 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் 4 பேரை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பண்ருட்டி,

பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெருவில் வசித்து வந்தவர் சரசு(வயது 70). இவர் கடந்த 5-6-2019 அன்று காலை மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் இவர் அணிந்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. 

இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொத்தனார் வேலை செய்து வரும் மனப்பாக்கத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்(32) மேலருங்குணத்தை சேர்ந்த பிரசன்னா வெங்கடேசன்(29), வேலாயுதம்(42) ஆகியோர் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

3 பேர் கைது

மேலும் இவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு பண்ருட்டி பொன்னுசாமி தெருவில் தனியாக வசித்து வந்த ஜெயலட்சுமி(60), மனப்பாக்கத்தை சேர்ந்த பத்மநாபன்(55), விழுப்புரம் பஸ் நிலையம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி ஆகியோரை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து விஸ்வநாதன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story