முககவசம் அணியாத 175 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத 175 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 14 April 2021 1:10 AM IST (Updated: 14 April 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியாத 175 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீசார் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2 நாட்களில் அரும்பாவூர் போலீசார் முககவசம் அணியாத 175 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூல் செய்துள்ளனர். மேலும் பொதுமக்கள், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முககவசம் அணிந்து ஒத்துழைப்பு அளிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

Next Story