தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை
தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தர்மபுரி:
தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேகமாக பரவும் கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் தர்மபுரி அன்னசாகரம் அரசு நடுநிலைப்பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் வருவதில்லை. அதே நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள்.
ஆசிரியருக்கு தொற்று
இந்த பள்ளியை சேர்ந்த 43 வயது ஆசிரியருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து அந்த பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த ஆசிரியருடன் தொடர்பில் இருந்த மற்ற ஆசிரியர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story