நெல்லையில் ஒரே நாளில் 220 பேருக்கு கொரோனா ஆசிரியை உள்பட 2 பேர் சாவு
நெல்லையில் ஒரே நாளில் 220 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆசிரியை உள்பட 2 பேர் இறந்தனர்.
நெல்லை:
நெல்லையில் ஒரே நாளில் 220 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆசிரியை உள்பட 2 பேர் இறந்தனர்.
கொரோனா தொற்று
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர், தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேர் உள்பட 220 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு முதியவர், கூட்டாம்புளி கிராமத்தை சேர்ந்த ஆசிரியை ஆகிய 2 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆசிரியை பணியாற்றிய இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நெல்லை மாநகரம்
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் நெல்லை மாநகர பகுதியில் 105 போ், நாங்குநேரி பகுதியில் 9 பேர், அம்பை பகுதியில் 14 பேர், மானூர் பகுதியில் 19 பேர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 25 பேர், பாப்பாக்குடி பகுதியில் 7 பேர், ராதாபுரம் பகுதியில் 9 பேர், வள்ளியூர் பகுதியில் 20 பேர், களக்காடு பகுதியில் 9 பேர், சேரன்மாதேவி பகுதியில் 7 பேர் அடங்குவர். நேற்று ஒரே நாளில் 38 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 60 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 963 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 219 பேர் இறந்துள்ளனர்.
Related Tags :
Next Story