கிணற்றில் மூழ்கி பாட்டி-பேத்தி பலி


கிணற்றில் மூழ்கி பாட்டி-பேத்தி பலி
x
தினத்தந்தி 14 April 2021 2:39 AM IST (Updated: 14 April 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

க.பரமத்தி அருகே கிணற்றில் மூழ்கி பாட்டி-பேத்தி உயிரிழந்தனர்.

  க.பரமத்தி
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள வி.தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி மல்லிகா (வயது 50). சுப்பிரமணியனின் அக்காள் சிவகாமியின் மகள் வாங்கல் புல்லாகவுண்டனூரைச் சேர்ந்த ராதாமணி-பாலசுப்பிரமணி ஆகியோரின் மகள் வர்ஷினி (வயது 11). இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். வர்ஷினிக்கு மல்லிகா பாட்டி முறையாகும். இந்தநிலையில் முத்துசோளிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு தோட்டத்து கிணற்றில் வர்ஷினிக்கு மல்லிகா நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Next Story