ஈரோட்டில் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை உயர்வு


ஈரோட்டில் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை உயர்வு
x
தினத்தந்தி 14 April 2021 4:29 AM IST (Updated: 14 April 2021 4:29 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்தது.

ஈரோடு
ஈரோட்டில் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்தது.
பூக்கள் விற்பனை 
ஈரோட்டுக்கு சத்தியமங்கலம், அந்தியூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விசேஷ தினங்களில் பூக்களின் விற்பனை அமோகமாக காணப்படும். அதேசமயம் விலையும் அதிகமாக காணப்படும்.
தமிழ் புத்தாண்டு இன்று (புதன்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் உள்ள பூக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இருசக்கர வாகனங்களில் பலரும் வந்து பூக்களை வாங்கியதால், அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதேசமயம் பூக்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால், விலை இருமடங்கு உயர்ந்து காணப்பட்டது.
வரத்து குறைந்தது
இதுகுறித்து பூக்கடைக்காரர் என்.எஸ்.குட்டி என்பவர் கூறியதாவது:-
கோடை வெயில் அதிகமாக காணப்படுவதால் பூக்களின் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.240-க்கும், முல்லை பூ ரூ.300-க்கும், ரோஜா ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், கோழிக்கொண்டை ரூ.50-க்கும், சம்பங்கி  ரூ.200-க்கும், அரளி ரூ.160-க்கும் விற்பனையானது. இந்த பூக்கள் கடந்த வாரத்தை காட்டிலும் சுமார் ரூ.100 விலை உயர்ந்துவிட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப்புத்தாண்டு என்றாலே பூக்களின் விற்பனை அமோகமாக காணப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஊரடங்கில் தளர்வுகள் காணப்பட்டாலும், ஜவுளிக்கடை போன்ற கடைகளில் வியாபாரம் சுமாராக இருப்பதால் கடைக்காரர்கள் குறைந்த அளவில் பூக்களை வாங்கி சென்றார்கள். இதனால் பூக்களின் விற்பனை எதிர்பார்த்ததைவிட மந்தமாகவே காணப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story