விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக காடுகளில் வாழும் விலங்குகள் கோடை காலத்தில் குடிநீரின்றி ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு செங்கல்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட சாலூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காப்புக்காடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை வனத்துறை அதிகாரிகள் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு கோட்ட வனச்சரகர் பாண்டுரங்கன் தலைமையில் வனக்காவலர்கள் டிராக்டர் உதவியுடன் வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பி வருகின்றனர். இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதை தவிர்க்க முடியும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story