ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
சிட்லப்பாக்கம் பெரிய ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியானார்கள்.
தாம்பரம்,
கிழக்கு தாம்பரம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சுனில் குமார் (வயது 12), விஷாந்த் (12), கோகுல் (12). இவர்கள் மூன்று பேரும் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை விளையாட சென்ற மூன்று சிறுவர்களும் இரவு வரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்களின் பெற்றோர்கள் அப்பகுதி முழுவதும் தேடியும் சிறுவர்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுவர்கள் மூன்று பேரும் சிட்லப்பாக்கம், பெரிய ஏரி அருகே விளையாடிக்கொண்டு இருந்ததாக அப்பகுதி பொதுமக்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர்கள் ஏரிக்கரை அருகே சென்றனர். பின்பு அவர்கள், சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சிட்லபாக்கம் போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு படை வீரர்கள் சிறுவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது 3 சிறுவர்களின் உடல்களும் பிணமாக மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story