மாவட்ட செய்திகள்

சென்னையில் நடுத்தெருவில் பயங்கரம்: அண்ணியை வெட்டிக்கொலை செய்த வாலிபர்கள் - சகோதரர் கொலைக்கு பழிதீர்த்தனர் + "||" + Terror in the middle of the street in Chennai: Teenagers who murdered brother-in-law - The brother avenged the murder

சென்னையில் நடுத்தெருவில் பயங்கரம்: அண்ணியை வெட்டிக்கொலை செய்த வாலிபர்கள் - சகோதரர் கொலைக்கு பழிதீர்த்தனர்

சென்னையில் நடுத்தெருவில் பயங்கரம்: அண்ணியை வெட்டிக்கொலை செய்த வாலிபர்கள் - சகோதரர் கொலைக்கு பழிதீர்த்தனர்
புளியந்தோப்பில் சகோதரர் கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக அண்ணியை வெட்டி கொலை செய்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு குருசாமி நகர் பகுதியை சேர்ந்த புஷ்பா என்பவரது மகள் சுப்ரியா (வயது 32) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரூபன் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சுப்ரியாவும், ரூபனும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ரூபனின் சகோதரர்களான ராம்குமார், சுதாகர், பிரேம்குமார், தினகரன் உள்ளிட்ட சிலர் சுப்ரியாவை பேசவேண்டும் என்று குருசாமி நகர் 9-வது தெருவில் உள்ள நடுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்ரியாவின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டினர். இந்த நிலையில், சுப்ரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

இதையடுத்து, சுப்ரியாவை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுப்ரியா உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த பேசின்பிரிட்ஜ் போலீசார் அங்கு சென்று சுப்ரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூபனின் சகோதரர் ரமேஷ் என்பவரை மர்மகும்பல் புளியந்தோப்பில் வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த கொலைக்கு சுப்ரியா மூளையாக செயல்பட்டதால் ஆத்திரமடைந்த ரமேசின் சகோதரர்கள் கடந்த சில மாதங்களாக சதித்திட்டம் தீட்டி வந்த நிலையில் அதற்கு பழித்தீர்க்கும் விதமாக நேற்று முன்தினம் இரவு சுப்ரியாவை கொலை செய்தது தெரிய வந்தது.

மனைவி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அங்கு வந்த ரூபனை போலீசார் கைது செய்த நிலையில் அவரது சகோதரர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.