அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி நேற்று அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அவினாசி
தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி நேற்று அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அவினாசி லிங்கேஸ்வரர் கோவில்
அவினாசியில் கொங்கு 7 சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் சுந்தரர் பதிகம் பாடியதுமான வரலாற்று சிறப்புமிக்க பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த கோவில் நேற்றுகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து அம்மன் மற்றும் அவினாசிலிங்கேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சித்திரை முதல் நாள் அவினாசிலிங்கேஸ்வரரை அதிகாலையில் தரிசித்து விட வேண்டும் என்பதற்காக அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலில் காத்திருந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
திருப்பூர், திருமுருகன்பூண்டி கருவலூர் சேவூர் தெக்கலூர் உள்ளிட்ட கிராமப்புறங்களிலிருந்தும், நீலகிரி மாவட்டம் ஊட்டி குன்னூர் கோத்தகிரி மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் குழந்தைகள், பெண்கள் என திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. இதேபோல் அவனாசி ஆகாசராயர் கோவில், சுந்தரமூர்த்தி நாயனார் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், கருவலூர் கங்காதீசுவரர் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
பல்லடம்
இதே போல் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு பல்லடம் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சித்திரைக்கனியை முன்னிட்டு பல்லடம் பகுதியில் மக்கள் தங்கள் வீடுகளில் பல்வேறு வகையான பழங்களுடன், பூஜைகள் செய்து சித்திரைக்கனியை சிறப்பாக கொண்டாடினர்.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் முக கவசத்துடன் கலந்துகொண்டனர். இதேபோல பல்லடம் பொன்காளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பாலதண்டபாணி கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில், சித்தம்பலம் நவக்கிரக கோட்டை உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் முக கவசத்துடன் கலந்து கொண்டனர்.
---
அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய கோவில் முன் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
----------
பல்லடம் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசாமி சுவாமி அருள்பாலித்ததையும், கொள்ளிடம் பனப்பாளையம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், பால தண்டபாணி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்ததையும் படத்தில் காணலாம்.
--------------------
Related Tags :
Next Story