தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி


தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 14 April 2021 5:01 PM IST (Updated: 14 April 2021 5:01 PM IST)
t-max-icont-min-icon

தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

உடுமலை
தமிழ்நாடு தீயணைப்புத்துறை தொடங்கப்பட்ட பின்பு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்புப்படை வீரர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு நிலைய வளாகங்களில் நீத்தார் நினைவு அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி நீத்தார் நினைவு தினத்தையொட்டி, நினைவஅஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உடுமலை தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீயணைப்பு நிலைய அதிகாரி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு படை வீரர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Next Story