போளூர் அருகே 3 வயது சிறுவனை பள்ளி மாணவன் கடத்தி சென்றான். 9 மணி நேரத்தில் சிறுவனை போலீசார் மீட்டனர்


போளூர் அருகே 3 வயது சிறுவனை பள்ளி மாணவன் கடத்தி சென்றான். 9 மணி நேரத்தில் சிறுவனை போலீசார் மீட்டனர்
x
தினத்தந்தி 14 April 2021 5:11 PM IST (Updated: 14 April 2021 5:14 PM IST)
t-max-icont-min-icon

போளூர் அருகே 3 வயது சிறுவனை பள்ளி மாணவன் கடத்தி சென்றான். 9 மணி நேரத்தில் சிறுவனை போலீசார் மீட்டனர்.

போளூர்,

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பெரியகரம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மகன் ரஞ்சித் (வயது 24), இவரது மகன் பாலமுகுந்தன் (3). நேற்றுமுன்தினம் சிறுவன் பாலமுகுந்தன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.

பிறகு சிறிது நேரத்தில் சிறுரனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனைதேடினர். அப்போது சேட்டுவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் உன் பேரனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். பேரன் உயிருடன் வேண்டுமானால் ரூ. 20 ஆயிரத்தை குண்ணத்தூர் கூட்ரோடு அருகில் வந்து கொடுத்து விட்டு, பேரனை மீட்டு செல்லவும் என்று கூறி யுள்ளார். 

மீட்பு

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையில் போளூர் நற்குன்று பாலமுருகன் மலைக்கோவில் அருகே சாலையில் சிறுவன் ஒருவன் அழுதுகொண்டிருந்ததை அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் பாபு என்பவர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் விரைந்து சென்று சிறுவனை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி பெரியகரம் கிராம த்திற்கு சென்று விசாரணை நடத்தினார். 

விளையாட்டாக...

அப்போது சிறுவனை கடத்தியது அதே ஊரை சேர்ந்த போளூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பணத்துக்காக சிறுவனை கடத்தவில்லை என்றும், விளையாட்டாக கடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சிறுவன் கடத்தப்பட்ட 9 மணி நேரத்தில் இரவு 11 மணி அளவில் போலீசார் சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story