தெற்கு ரெயில்வேயின் புதிய முதன்மை தலைமை வணிக மேலாளராக ரவி வல்லூரி நியமனம்


தெற்கு ரெயில்வேயின் புதிய முதன்மை தலைமை வணிக மேலாளராக ரவி வல்லூரி நியமனம்
x
தினத்தந்தி 14 April 2021 5:41 PM IST (Updated: 14 April 2021 5:41 PM IST)
t-max-icont-min-icon

தெற்கு ரெயில்வேயின் புதிய முதன்மை தலைமை வணிக மேலாளராக ரவி வல்லூரி நியமனம்.

சென்னை, 

தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக இருந்த வந்த ஆர்.தனஜெயலு, தற்போது தென் மத்திய ரெயில்வேயின் முதன்மை தலைமை இயக்கக மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தெற்கு ரெயில்வேயின் புதிய முதன்மை தலைமை வணிக மேலாளராக ரவி வல்லூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ரவி வல்லூரி, 1987-ம் ஆண்டு ரெயில்வே பணியில் சேர்ந்தார். தற்போது அவர் வட மத்திய ரெயில்வேயின் முதன்மை தலைமை இயக்கக மேலாளராக பணியாற்றி வந்தார். தனது பணி காலத்தில் 8 ரெயில்வே மண்டலங்களின், இயக்ககம், வணிகம், திட்டமிடல், பாதுகாப்பு, பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ரவி வல்லூரி திறம்பட பணியாற்றி உள்ளார்.

இதுவரை 8 புத்தகங்கள் எழுதிய அவருக்கு பல்வேறு கவுரவ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story