திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை போட்டி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி மாணவர்களிடையே வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற இக்கட்டுரை போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் துறை தலைவர் கு.கதிரேசன் செய்திருந்தார்.
“வாக்காளர் பொறுப்பும் கடமையும்” என்ற தலைப்பில் நடந்த இந்த கட்டுரை போட்டியில் முதுநிலை வேதியியல் முதலாமாண்டு மாணவி பேச்சியம்மாள் முதல் பரிசையும், வணிகவியல் முதலாமாண்டு மாணவர் சிவமூர்த்தி 2ம் பரிசையும், ஸ்நோவின் 3ம் பரிசையும் பெற்றனர். இவர்களை பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story