கோவில்பட்டியில் போலீஸ் குடியிருப்பில் கபசுர குடிநீர் வழங்கல்


கோவில்பட்டியில் போலீஸ் குடியிருப்பில் கபசுர குடிநீர் வழங்கல்
x
தினத்தந்தி 14 April 2021 7:46 PM IST (Updated: 14 April 2021 7:46 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியிலுள்ள போலீஸ் குடியிருப்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் உத்தரவின்பேரில் கோவில்பட்டி போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா 2-வது பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் கலந்து கொண்டு போலீசார் மற்றும் குடும்பத்தினருக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

Next Story