பூதலூர் வட்டாரத்தில் 2,315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது மருத்துவ அலுவலர் தகவல்
பூதலூர் வட்டாரத்தில் 2,315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.
திருக்காட்டுப்பள்ளி,
பூதலூர் வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பூதலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயராஜ் கூறியதாவது:-
பூதலூர் வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைகளிலும், கோவிலடி, பாளையப்பட்டி மற்றும் மாரனேரி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அம்மா மினி கிளீனிக்குகளிலும் நடைபெற்று வருகிறது.
கடந்த 11-ந் தேதி தொடங்கிய கொரோனா தடுப்பூசி திருவிழாவில் நேற்று வரை பூதலூர் வட்டாரத்தில் மட்டும் 2,315 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆர்வம்
தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். பூதலூர் வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஒரு நாளைக்கு 150 பேருக்கு கொேரானா பரிசோதனை செய்யப்படுகிறது.
பூதலூர் வட்டாரத்திலுள்ள சுற்றுலா தலங்களான கல்லணை மற்றும் பூண்டி மாதா பேராலயத்தில் மருத்துவகுழுவினர் முகாமிட்டு கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள். தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story