ஓ.பன்னீர்செல்வம்-அரசியல் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை


ஓ.பன்னீர்செல்வம்-அரசியல் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
x
தினத்தந்தி 14 April 2021 9:37 PM IST (Updated: 14 April 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கரின் 131 வது பிறந்தநாளையொட்டி, தேனி மாவட்டத்தில் உள்ள அவருடைய சிலைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி: 

அம்பேத்கர் பிறந்தநாள்
அம்பேத்கர் 131-வது பிறந்த நாளையொட்டி நேற்று, தேனி அருகே கோட்டூரில் உள்ள அவருடைய சிலைக்கு துணை முதல்-அமைச்சரும், அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

பின்னர் பொதுமக்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கம்யூனிஸ்டு கட்சி

தேனி அருகே அரண்மனைப்புதூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். 

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 தமிழ்ப்புலிகள் கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்ட செயலாளர் விடுதலை சேகர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பெரியகுளம் 
பெரியகுளத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லமுத்து தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் மூக்கையா, சரவணக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதி மய்யம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செய்தனர். 

அதுபோல், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

 அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story