பழனி முருகன் கோவிலில் அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம்


பழனி முருகன் கோவிலில் அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 April 2021 10:04 PM IST (Updated: 14 April 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார்.

பழனி :
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று குடும்பத்துடன் பழனிக்கு வருகை தந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் பூஜையில் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தார். 
முன்னதாக பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அப்புக்குட்டி, உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் அவர் தங்கரத புறப்பாட்டில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டார். அப்போது வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், பழனி நகர அ.தி.மு.க. செயலாளர் முருகானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story