கொடைக்கானல் ஏரிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்த இளைஞர்கள் சுற்றுலா பயணிகள் அச்சம்


கொடைக்கானல் ஏரிச்சாலையில்   மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில்  சென்று சாகசம் செய்த இளைஞர்கள்  சுற்றுலா பயணிகள் அச்சம்
x
தினத்தந்தி 14 April 2021 10:18 PM IST (Updated: 14 April 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் ஏரிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்யும் இளைஞர்களால் சுற்றுலா பயணிகள் அச்சப்படுகின்றனர்.

கொடைக்கானல்:
கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி மிகவும் புகழ்பெற்றது. இதன் அருகே உள்ள ஏரிச்சாலையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் சைக்கிள்சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் ஈடுபடுவது வழக்கம். இந்த சாலையில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் சிலர் அதிவேகத்தில் மோட்டார்சைக்கிள்களில் சாகசங்கள் செய்து வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அச்சப்படுகின்றனர். 
சைக்கிளில் செல்லும் சிறுவர், சிறுமிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து மோட்டார்சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story