மருதமலை வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள்


மருதமலை வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள்
x
மருதமலை வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள்
தினத்தந்தி 14 April 2021 10:22 PM IST (Updated: 14 April 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

மருதமலை வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள்

கோவை

கோவை வடவள்ளியை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் வனப்பகுதியொட்டி உள்ளது.

 மருதமலை வனப்பகுதியில் கோடைக்காலங்களில் செடி கொடிகள் காய்ந்து மரங்களின் உரசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.

 இதனை தடுக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு மருதமலை வனப்பகுதியில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் வகையில் கோவை வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் வனத்துறையினர் சார்பில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டது.

இதன்படி வனப்பகுதியில் எல்லைப்பகுதியில் உள்ள புல் புதர்களில் தீப்பிடித்தால் உடனடியாக வனப்பகுதிக்குள் செல்லாமல் தடுக்கும் வகையில், புல் பூண்டுகளை வெட்டியும், தீயிட்டும் அகற்றி இடைவெளியை ஏற்படுத்தினர். 

இந்த பணிகளை கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் வனச்சரகர் சிவா தலைமையில் வேட்டை தடுப்பு போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story