திருவையாறில் பள்ளி மாணவி உள்பட 3 பேருக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
திருவையாறில் பள்ளி மாணவி உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருவையாறு,
திருவையாறு-கும்பகோணம் சாலை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படடு வருகிறது. திருவையாறு ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருச்சியில் உறவினர் துக்கத்திற்கு சென்றுவிட்டுவந்தார். அவருக்கும் கொரோனா பாதிப்்பு கண்டறியப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதேபோல் திருவையாறு கல்யாணபுரம் 1-ம் சேத்தியை சேர்ந்த பள்ளி மாணவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
நோய் தடுப்பு நடவடிக்கைகள்
திருவையாறு பகுதியில் 3 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருவையாறு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் செந்தில் மற்றும் சுகாதாரபணியாளர்கள் கல்யாணபுரம் முதல் சேத்தி, ஸ்ரீராம்நகர், கும்பகோணம் சாலை ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story