சோளிங்கரில் செல்போன் டவர் பேட்டரி அறையில் தீ விபத்து


சோளிங்கரில் செல்போன் டவர் பேட்டரி அறையில் தீ விபத்து
x
தினத்தந்தி 14 April 2021 10:26 PM IST (Updated: 14 April 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கரில் செல்போன் டவர் பேட்டரி அறையில் தீ விபத்து

சோளிங்கர்

சோளிங்க பஸ் நிலையம் அருகே தனியார்செல்போன் டவர்உள்ளது. கடந்த 4 வருடங்களாக இந்த டவர் பயன்படாமல் செயல்படாமல் உள்ளது. இந்தநிலையில் செல்போன் டவரை அகற்றும் பணி நடந்துள்ளது. அப்போது அருகில் உள்ள பேட்டரி அறையில் திடீரென தீப்பற்றி உள்ளது. இதை கண்ட‌ பணியாளர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதுகுறித்து சோளிங்கர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story