தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கிய போலீசார்
கம்பம் மெட்டு சோதனை சாவடியில் முக கவசம் அணிந்து வந்த ஏலக்காய் தோட்ட தொழிலாளர்களுக்கு போலீசார் இனிப்பு வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு ஜீப்களில் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.
அவர்கள் முககவசம் அணிந்து செல்கிறார்களா? என்பது குறித்து சோதனை நடத்த போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை கம்பம்மெட்டு சோதனை சாவடியில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கம்பம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு தோட்ட தொழிலாளர்களை ஏற்றி சென்ற ஜீப்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
பின்னர் தொழிலாளர்களை சமூக இடைவெளியில் நிற்க வைத்து, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் ஜீப்பில் வந்த தோட்ட தொழிலாளர்கள் 100 சதவீதம் பேர் முககவசம் அணிந்திருந்ததால் அவர்களுக்கு போலீசார் இனிப்புகளை வழங்கி பாராட்டினர்.
மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் முறை குறித்து தொழிலாளர்கள் உறுதி மொழி எடுத்தனர்.
மேலும் அரசின் வழிகாட்டுதலை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story