கரூர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர்,
சமீப நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது. தற்போது அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 58 வயது பெண், வாங்கப்பாளையத்தை சேர்ந்த 35 வயது பெண், 16 வயது சிறுவன், ரெட்டிபாளையத்தை சேர்ந்த 22 வயது வாலிபர், தென்னிலையை சேர்ந்த 22 வயது வாலிபர், பரமத்தியை சேர்ந்த 60 வயது முதியவர்.
மருத்துவமனையில் அனுமதி
மேலும், தளவாபாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, பாதிரிபட்டியை சேர்ந்த 40 வயது ஆண், வாங்கலை சேர்ந்த 66 வயது முதியவர், தாந்தோணிமலையை சேர்ந்த 55 வயது பெண், பெரியகுளத்துபாளையத்தை சேர்ந்த 29 வயது வாலிபர் மற்றும் 40 வயது ஆண், கொடுமுடியை சேர்ந்த 27 வயது பெண், திருக்காம்புலியூரை சேர்ந்த 24 வயது வாலிபர், மகாதானபுரத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் உள்ளிட்ட 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story