சங்கராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்


சங்கராபுரத்தில்  கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 14 April 2021 10:43 PM IST (Updated: 14 April 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

சங்கராபுரம்

சங்கராபுரம் பொது சேவை அமைப்பின் கூட்டமைப்பு மற்றும் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு பொது சேவை அமைப்பின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுதாகரன், சேகர், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ரவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குசேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். தொழில்அதிபர் ஜனார்த்தனன் முகாமை தொடங்கி வைத்தார். 

இதைத் தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில் டாக்டர் லாவண்யா, சுகாதார ஆய்வாளர் சரவணன், பாலமுருகன், கிராம செவிலியர் சுசீலா, சுமதி, ராணி, சசிகலா, புவனேஸ்வரி அகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் 45 வயதுக்கு மேற்பட்ட 149 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். நிகழ்ச்சியில் பொதுசேவை நிர்வாகிகள் தீபா, சரவணன், சீனிவாசன், விஜயகுமார், கலியமூர்த்தி, வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story