லாலாபேட்டையில் வாழை இலை விலை உயர்வு
லாலாபேட்டையில் வாழை இலை விலை உயர்ந்துள்ளது.
லாலாபேட்டை
லாலாபேட்டை, கள்ளப்பள்ளி, கருப்பத்தூர் பிள்ளையார் பாளையம், மேட்டு மகாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். தற்போது போதிய மழை இல்லாததாலும் பாசன வாய்க்காலில் தண்ணீர் இல்லாததாலும் விவசாயிகள் குறைந்த அளவில் வாழை சாகுபடி செய்துள்ளனர். வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாழை இலை ரூ.3-க்கு விற்பனையானது. தற்போது ஒரு இலை ரூ.5-க்கு விற்பனையாகிறது. இதனை வீடுகள்.ஓட்டல்கள் மற்றும் வெளியூரிலிருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர் இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story